மனிதகுலம்: நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு | HUMANKIND: A Hopeful History

Save 15%
SKU: 9789355430878

Price:
Rs. 509 Rs. 599
Add to Wishlist

Description


  • Author : Rutger Bregman
  • Publisher ‏ : ‎ Manjul Publishing
  • Language ‏ : ‎ Tamil
  • Print length ‏ : ‎ 712 pages

ABOUT THE BOOK

மனிதர்கள் இயல்பிலேயே தன்னலவாதிகள் என்றும், தங்களுடைய சொந்த நலனுக்கு முன்னுரிமை கொடுத்தே அனைத்தையும் செய்பவர்கள் அவர்கள் என்றும் காலங்காலமாக நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இடதுசாரிகளிலிருந்து வலதுசாரிகள்வரை, வரலாற்றியலாளர்களிலிருந்து எழுத்தாளர்கள்வரை, உளவியலாளர்களிலிருந்து தத்துவவியலாளர்கள்வரை அனைவரையும் ஒன்றிணைக்கின்ற ஒரு நம்பிக்கை அது. இந்த நம்பிக்கையின் வேர்கள் மாக்கியவெல்லியிலிருந்து ஹாப்ஸ்வரை, சிக்மண்ட் பிராய்டிலிருந்து டாக்கின்ஸ்வரை மேற்கத்தியச் சிந்தனைக்குள் ஆழமாக ஊடுருவியுள்ளன. ‘மனிதகுலம்’ எனும் இந்நூல் ஒரு புதிய விவாதத்தை முன்வைக்கிறது. அடிப்படையில் மக்கள் நல்லவர்கள் என்று அனுமானிப்பது எதார்த்தமானதாகவும், அதே நேரத்தில் புரட்சிகரமானதாகவும் இருக்கிறது என்ற வாதம்தான் அது. மற்றவர்களோடு போட்டி போடுவதற்குப் பதிலாக அவர்களோடு ஒத்துழைப்பதற்கும், அவர்களைச் சந்தேகிப்பதற்குப் பதிலாக அவர்களை நம்புவதற்கும் நமக்கு ஏற்படுகின்ற உள்ளுணர்வு, பரிணாம அடிப்படையில் உருவான ஒன்று. மற்றவர்களைப் பற்றி மோசமாக நினைப்பது, நாம் அவர்களை எவ்வாறு பார்க்கிறோம் என்பதன்மீது மட்டுமல்லாமல், நம்முடைய அரசியல்மீதும் பொருளாதாரத்தின்மீதும் தாக்கம் ஏற்படுத்துகிறது. சர்வதேச அளவில் விற்பனையில் சாதனை படைத்துள்ள நூல்களை எழுதியுள்ள ருட்கர் பிரெக்மன், இந்த முக்கியமான நூலில், உலகில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பிரபலமான ஆய்வுகளில் சிலவற்றையும், பிரபலமான வரலாற்று நிகழ்வுகளில் சிலவற்றையும் எடுத்து, அவற்றை மறுவடிவமைப்பு செய்து, கடந்த 2,00,000 ஆண்டுகால மனிதகுல வரலாற்றைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறார். மனித இனத்தின் இரக்க குணத்திலும், தன்னலம் பாராமல் பிறருடைய நலன்மீது அக்கறை கொள்கின்ற பண்பிலும் நம்பிக்கை கொள்வது எவ்வாறு நாம் சிந்திக்கும் விதத்தை மாற்றியமைக்கும் என்பதையும், அந்த நம்பிக்கை, நம்முடைய சமுதாயத்தில் உண்மையான மாற்றத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாக எவ்வாறு செயல்படும் என்பதையும் பிரெக்மன் இந்நூலில் காட்டுகிறார்.

ABOUT THE AUTHOR

ருட்கர் பிரெக்மன், ஐரோப்பாவின் பிரபலமான இளம் வரலாற்றியலாளர்களில் குறிப்பிடத்தக்கவர். டச்சு மொழியில் எழுதப்பட்ட ‘உட்டோப்பியா ஃபார் ரியலிஸ்ட்ஸ்’ என்ற அவருடைய முந்தைய நூல், நியூயார்க் டைம்ஸ் மற்றும் சண்டே டைம்ஸ் பத்திரிகைகள் தொகுத்து வழங்குகின்ற, ‘மிகச் சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்ற நூல்கள்’ பட்டியலில் இடம்பெற்றது. அது 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘த கரெஸ்பான்டென்ட்’ என்ற இணைய இதழில் அவர் எழுதிய கட்டுரைகளுக்காக, மிகப் பிரபலமான ‘ஐரோப்பியப் பத்திரிகை விருது’க்கு இரண்டு முறை அவர் பரிந்துரைக்கப்பட்டார். வாஷிங்டன் போஸ்ட் மற்றும் கார்டியன் பத்திரிகைகளிலும் அவருடைய படைப்புகள் இடம்பெற்றுள்ளன. ‘ஏழ்மை என்பது பணப் பற்றாக்குறையே அன்றி, நடத்தைப் பற்றாக்குறை அல்ல’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய ‘டெட்’ சொற்பொழிவை இதுவரை 36 இலட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ‘பிக் இஷ்யூ’ பத்திரிகை வெளியிட்ட, 2020 ஆம் ஆண்டில் ‘உலகில் மாற்றம் ஏற்படுத்திய 100 நபர்கள்’ பட்டியலில் ருட்கர் பத்தாவது இடத்தைப் பிடித்திருந்தார். அவர் நெதர்லாந்தில் வசித்து வருகிறார்

Customer Reviews

No reviews yet
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)

You may also like

Recently viewed by You