AARUSUVAIYUM ANJARAIPETTIYUM

SKU: BK 0046307

Price:
Rs. 160
Add to Wishlist

Description

தற்போது உருவாகியுள்ள வாசிப்புப் பழக்கம் உடலைக் குறித்தும் சிந்திக்க வைத்துள்ளது. அக,புற நெருக்கடிகளால் சிக்கித் தவிக்கும் மனிதனை அதிலிருந்து விடுதலை செய்யும் அருமருந்தாக தற்போது புத்தகங்கள் இருக்கின்றன.
புத்தகங்கள் தற்போது இரண்டு பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. ஒன்று, மனதை நெருக்கடியில் இருந்து விடுவிப்பது; மற்றொன்று உடலை நோயிலிருந்து காப்பது. மருத்துவரிடம் செல்லாமல் கிடைக்கும் மருந்துகளைக் கொண்டு நம்முடைய நோயைக் குணமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நாமும் மருத்துவர்தானே!
பாட்டிகளின் கை வைத்தியத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. அவர்களின் நினைவுகளில் ஒரு மருத்துவ ஆய்வுக்கூடமே அன்று இருந்தது. எந்தவித பின்விளைவுகளும் இல்லாத அத்தகைய சித்த மருத்துவத்தை மக்கள் இன்று அதிக அளவில் நாடத் தொடங்கியுள்ளனர். இதில் ஆனந்த விகடனின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆறாம் திணைதான் அதற்கான வாசல். ஆறாம் திணை தந்த மருத்துவர் கு.சிவராமனின் மற்றுமொரு படைப்புதான் இந்த நூல். பாட்டிக்கும் பேத்திக்குமான உரையாடல் வடிவில் அனைத்து விஷயங்களையும் தந்திருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு.
மூட்டுவலிக்கு முடக்கத்தான், ஆழ்ந்த தூக்கத்துக்கு அமுக்கராங் கிழங்கு, பித்தத் தலைவலிக்கு சுக்குக் கஷாயம், எலும்புக்குக் கேழ்வரகு, கண்ணுக்குத் தினை, அரிப்பைப் போக்க அருகம்புல் சாறு என்று நோயைப் போக்குவதற்கு மட்டும் அல்லாது தோல் சுருக்கம் மறைய தோசை மாவு, மீசையை மழிக்க மூலிகை திரெடிங் என்று அழகுக் குறிப்புகளையும் தந்திருப்பது கூடுதல் சிறப்பு.
டாக்டர் விகடனில் வெளிவந்தபோதே மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில். உங்கள் பாட்டி விட்டுச்சென்ற வைத்திய முறைகளை இந்தப் புத்தகம் செய்யும் என்பதில் ஐயமில்லை!
  • Publisher ‏ : ‎ Vikatan.com Private Limited (1 December 2016)
  • Language ‏ : ‎ Tamil

Customer Reviews

Be the first to write a review
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)

You may also like

Recently viewed by You