Description
“இந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை”
ஆசிரியர் - சு. தியடோர் பாஸ்கரன்
புத்தகத்தை பற்றிய குறிப்பு:
மனிதரை அண்டி நெருங்கிய உறவு ஏற்படுத்திக்கொண்ட முதல் விலங்கினம் நாய். இதற்கான சான்றுகள் தொல்பழங்காலத்துப் பாறை ஓவியங்களாகத் தமிழ்நாட்டில் உண்டு. என்றாலும் மற்ற விலங்குகளுடன் ஒப்பிட்டால் வரலாற்றில் நாய் உதாசீனப்படுத்தப்பட்டது தெரிகின்றது.
இமயத்திலிருந்து குமரிவரை இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு புவியியல் சூழலுக்கேற்ற பரிணாமத் தகவமைப்பில் உருவாகியிருந்த வெவ்வேறு நாயினங்களில் பல அழிந்துவிட்டன. காலனித்துவ ஆட்சியில் மக்களின் கவனத்தை மேலை நாட்டு நாய்கள் ஈர்த்தன. எஞ்சியிருக்கும் சில உள்ளூர் நாய்களின் தனித்துவமும் அக்கறையின்மையால் சீரழிந்து வருகின்றது. நம்நாட்டு உயிரினப் பாரம்பரியத்தின் ஒரு சிறப்பு கூறான இருபத்தைந்து நாயினங்களை நூலாசிரியர் பதிவுசெய்கின்றார்.
எழுத்தாளர் பற்றிய குறிப்பு:
பாஸ்கரன் தாராபுரத்தில் 1940 இல் பிறந்தார். பாளையங்கோட்டை சென். ஜான் கல்லூரியில் இடைநிலை வகுப்புப் படித்து பின்னர் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் முதுகலை (வரலாறு) பட்டம் பெற்றார். பட்டம் பெற்றவுடன், தமிழக அரசு ஆவணக் காப்பகத்தில் ஆய்வாளராக இரண்டாண்டுகள் பணி புரிந்தார். 1964ல் இந்திய தபால் துறையில் சேர்ந்தார். திருச்சியில் இரண்டாண்டுகள் கோட்ட மேலாளராகப் பணிபுரிந்தபின் வேலூருக்கும் பின்னர் மேகாலயாவிற்கும் பணிமாற்றம் செய்யப்பட்டார். அவர் மேகாலயாவிலிருந்த போது 1971ல் வங்காளதேச விடுதலைப் போர் மூண்டது. அப்போது பாஸ்கரன் தபால் தந்தித் துறையையும் பாதுகாப்புத் துறையையும் இணைக்கும் தனி அதிகாரியாக (Special Officer For War Efforts) நியமிக்கப்பட்டார். தபால் துறையில் பணிபுரிந்து கொண்டே திரைப்பட வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தபால் துறையில் படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டின் தலைமை தபால் அதிகாரியாக (Chief Postmaster General) ஓய்வு பெற்றார். தற்பொழுது தன் மனைவி திலகாவுடன் பெங்களூரில் வசித்து வருகிறார்..
பதிப்பகம் |
: |
காலச்சுவடு பதிப்பகம் |
பக்கங்கள் |
: |
147 |
விலை |
: |
ரூ.190/- |
தள்ளுபடி விலை |
: |
ரூ.171/- |