Description
Mugil
புத்தகத்தை பற்றிய குறிப்பு: சில விஷயங்கள் என்றைக்குமே சலிக்காதவை. அதில் ஒன்று காலம் காலமாக நாம் கேட்டு, படித்துவரும் ராஜா, ராணிக் கதைகள். கதைகளைவிட மகாராஜா, மகாராணிகளின் நிஜ வாழ்க்கை பல மடங்கு சுவாரசியமானவை என்று ஆதாரங்களுடன் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது இந்தப் புத்தகம். ஒவ்வொரு சமஸ்தானத்துக்குப் பின்னும், ஒவ்வொரு மகாராஜாவின் வாழ்க்கைக்குள்ளும் புதைந்து கிடக்கும் தகவல்களை, நுணுக்கமான விஷயங்களை அழகாக ஒரு கதைபோலச் சொல்லிச் செல்கிறது - அகம், புறம், அந்தப்புரம். கோமான்களின் வாழ்க்கை, ஆடம்பரக் கோமாளிகளின் வாழ்க்கையை மட்டும் அலங்காரத்துடன் சொல்லாமல், காலத்துக்கும் குருதி சிந்தி உழைக்கும் குடிமக்களின் வாழ்க்கையையும் அதற்குரிய அவலத்துடன் பதிவு செய்திருப்பது இந்தப் புத்தகத்துக்குரிய சிறப்பு. அரண்மனைக்குள்ளும் அந்தப்புரத்துக்குள்ளும் மட்டுமே சுற்றிவராமல், அதைத்தாண்டி வெளியில் பல அரிய வரலாறுகளையும், காலனியாதிக்க இந்தியா குறித்த சரித்திரத்தையும் ஒருங்கே சேர்த்துச் சொல்லும் இந்தப் புத்தகம், நிச்சயம் ஒரு வரலாற்றுப் பெட்டகம். ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் அவர்களது படைப்பில் மாஸ்டர் பீஸ் உண்டு. எழுத்தாளர் முகில் இதுவரை எழுதியுள்ள புத்தகங்களில், ‘அகம், புறம், அந்தப்புரம்’தான் அவருடைய மாஸ்டர் பீஸ்..
எழுத்தாளர் பற்றிய குறிப்பு: முகில் முகில் என்பது புனைப்பெயர். வளர்ந்தது, படித்தது எல்லாமே சொந்த ஊரான தூத்துக்குடியில். வேதியியலில் இளநிலைப்பட்டம், தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலைப்பட்டம் பெற்றிருந்தாலும் எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்கு வந்தவர். விகடன் குழுமம், கல்கி குழுமம், கிழக்கு பதிப்பகம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். தற்போது பத்திரிகை, புத்தகம், தொலைக்காட்சி, சினிமா என பல்வேறு தளங்களில் பணியாற்றி வரும் முழுநேர எழுத்தாளர்.
பதிப்பகம் |
: |
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் |
ISBN |
: |
9789383067022 |
Pages |
: |
1032 |
விலை |
: |
ரூ.1333/- |