MAKE YOUR BED

SKU: BK 0132417

Price:
Rs. 250
Add to Wishlist

Description

2014 ஆம் ஆண்டு மே 17 அன்று, அமெரிக்கக் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அட்மிரல் வில்லியம் எச். மெக்ரேவன், டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் அவர்கள் முன் ஓர் உரை நிகழ்த்தினார். “இங்குத் தொடங்குவது உலகையே மாற்றும்” என்ற அப்பல்கலைக்கழகத்தின் குறிக்கோள் வாசகத்தை அடித்தளமாக வைத்து அவர் ஆற்றிய உரையில், தான் நேவி சீல் பயிற்சியின்போது கற்றுக் கொண்ட பத்துப் பாடங்களை மாணவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார். அப்பாடங்கள் தன்னுடைய பயிற்சியின்போதும், தன்னுடைய நீண்ட, சாகசமிக்கக் கடற்படைப் பணியின்போதும் தனக்கு உதவியதுபோல வாழ்க்கை முழுவதும் தனக்கு எப்படி உதவின என்பதையும் அவர் எடுத்துரைத்தார். தங்களை மாற்றிக் கொள்ளவும், அதன் மூலம் இந்த உலகை மாற்றவும் அப்பாடங்களை எவரொருவராலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறி அவர் அம்மாணவர்களுக்கு ஊக்கமளித்தார். காலம் கடந்து நிற்கின்ற ஆற்றல் கொண்ட இந்நூல், நடைமுறைக்கு ஏற்றப் பல அறிவுரைகளையும் ஊக்குவிப்பையும் கொண்டுள்ளது. வாழ்க்கையின் இருண்ட கணங்களில்கூட அதிக அளவில் சாதிப்பதற்கு இந்நூல் உங்களுக்கு உத்வேகமூட்டும் என்பது உறுதி.

About the Author

அட்மிரல் வில்லியம் எச். மெக்ரேவன், அமெரிக்கக் கடற்படையில் ஓர் அட்மிரலாக இருந்து ஓய்வு பெற்றவர். அவருடைய ‘உங்கள் படுக்கையை மடித்து வையுங்கள்’ நூல், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தொகுத்து வழங்குகின்ற, மிகச் சிறப்பாக விற்பனையாகின்ற நூல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இந்நூல் தவிர மேலும் இரண்டு பிரபலமான நூல்களையும் அவர் எழுதியுள்ளார். அவர் ஒரு நேவி சீல் வீரராகப் பணியாற்றியிருந்த 37 ஆண்டுகளில், அந்த அமைப்பின் அனைத்துத் தளங்களிலும் தலைமையேற்றுப் பணியாற்றியுள்ளார். ஒரு நான்கு நட்சத்திர அட்மிரல் என்ற முறையில், இறுதியாக அவர் அமெரிக்காவின் அனைத்துச் சிறப்புப் பிரிவுகளின் தளபதியாகப் பணியாற்றியிருந்தார். இராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்றப் பிறகு, 2015லிருந்து 2018 வரை, டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தராக அவர் பணியாற்றினார். இப்போது அவர் ஆஸ்டின் நகரில் தன் மனைவி ஜார்ஜீனுடன் வசித்து வருகிறார்.
  • Publisher ‏ : ‎ Manjul Publishing House; First Edition (26 December 2022); Manjul Publishing House Pvt. Ltd., 2nd Floor, Usha Preet Complex, 42 Malviya Nagar, Bhopal - 462003 - India
  • Language ‏ : ‎ Tamil
  • Paperback ‏ : ‎ 160 pages
  • ISBN-13 ‏ : ‎ 9789355431721
  • Reading age ‏ : ‎ 18 years and up
  • Item Weight ‏ : ‎ 140 g
  • Dimensions ‏ : ‎ 14 x 1.5 x 22 cm
  • Country of Origin ‏ : ‎ India

Customer Reviews

Be the first to write a review
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)

You may also like

Recently viewed by You