Description
- Author : Amish
- Publisher : Eka
- Paperback : 420 pages
- ISBN-13 : 978-9395073813
About the Author
அமிஷ் ஒரு டிப்ளோமேட் மற்றும் எழுத்தாளர்.
அமிஷ் தனது முதல் புத்தகத்தை 2010இல் வெளியிட்டார்.சமீபத்தில் வெளியான வார் ஆஃப் லங்கா உட்பட இன்று வரை 10 புத்தகங்கள் (நாவல்கள் மற்றும் புனைகதை அல்லாதவை) எழுதியுள்ளார். அவரது புத்தகங்கள் 6 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளன மற்றும் 20 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது புத்தகங்கள் மிகப்பெரியளவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள், ஆழமான சிந்தனை, இந்தியர் என்ற பெருமையில் வேரூன்றியதாகவும் பரந்த கொள்கைகள் கொண்ட முற்போக்கான கண்ணோட்டம் ஆகியவற்றால் வலுவூட்டப்படுகிறது என்று அவரது விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
இந்திய பதிப்பக வரலாற்றில் துரிதமாக விற்கும் புத்தகங்களின் எழுத்தாளர் என்று அவரை தி வீக் பத்திரிகை ஒப்புக்கொண்டுள்ளது. ஃபோர்ப்ஸ் இந்தியா நிறுவனம் தொடர்ந்து அவரை இந்தியாவின் முதல் 100 செல்வாக்கு மிக்க பிரபலங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
2014இல் அமிஷ் உலகெங்கிலும் உள்ள சிறந்த தலைவர்களுக்கான மதிப்பிற்குரிய அமெரிக்க திட்டமான ஐசன்ஹோவர் ஃபெலோ ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021இல் யுகேவில் 21ஆம் நூற்றாண்டின் ஐகான் விருது மற்றும் தன்னுடைய நாவல் சுஹேல்தேவிற்காக கோல்டன் புக் விருதையும் வென்றார்.
அதோடு டிஸ்கவரி டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பாராட்டப்பட்ட லெஜண்ட்ஸ் ஆஃப் ராமாயண் உட்பட தொலைக்காட்சி ஆவணப்படங்களுக்கும் தொகுப்பாளராக உள்ளார் அமிஷ்.
யுகேவின் இந்திய தூதரகத்தில் கலாச்சார அமைச்சராகவும் அக்டோபர் 2019இல் லண்டனில் உள்ள தி நேரு சென்டரின் இயக்குனராகவும் பதவியேற்றுள்ளார்.
அமிஷ் கல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டின் முன்னாள் மாணவர் ஆவார். 2017இல் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்கத்தாவின் மிகச்சிறந்த முன்னாள் மாணவர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது). முழுநேர எழுத்தாளராக மாறுவதற்கு முன் அமிஷ் நிதிச் சேவைகள் துறையில் 14 ஆண்டுகள் பணியாற்றினார்.