CREATIVITY AND PROBLEM SOLVING: THE BRIAN TRACY SUCCESS LIBRARY

SKU: BK 0131246

Price:
Rs. 199
Add to Wishlist

Description

வேலைச் சூழல்களில் தோன்றுகின்ற சவால்களுக்குப் படைப்பாற்றல்ரீதியான தீர்வுகளைக் கண்டுபிடிக்கின்ற திறமைதான் ஓர் அசாதாரணமான தொழில் வாழ்க்கைக்கான முத்திரையாகும். உங்களுடைய வேலையில் நீங்கள் முன்னேறுவதற்குப் படைப்பாற்றல்ரீதியாகச் சிந்திக்கின்ற திறன் இன்றியமையாதது. உலகின் தலைசிறந்த வெற்றியாளர்களில் ஒருவரான பிரையன் டிரேசி, உதவிகரமான கருவிகள் கிடைத்தால் எவரொருவராலும் படைப்பாற்றலை மேலும் வளர்த்துக் கொள்ள முடியும் என்று கருதுகிறார். படைப்பாற்றல்மிக்க யோசனைகளை ஊற்றெடுக்க வைக்கின்ற 21 நிரூபணமான உத்திகளை பிரையன் இந்நூலில் வெளிப்படுத்துகிறார். இந்நூலிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ளக்கூடிய முக்கியமான விஷயங்களில் கீழ்க்கண்டவையும் அடங்கும்: • படைப்பாற்றலைத் தூண்டுகின்ற மூன்று காரணிகளை முடுக்கிவிடுவது எப்படி • உங்களுடைய ஊழியர்கள் தங்களிடம் படைப்பாற்றல் மனப்போக்கை உருவாக்கிக் கொள்ள உங்களால் எப்படி உதவ முடியும் • நேர்த்தியான தீர்வுகளை உருவாக்குவதற்கு எந்த மாதிரியான கேள்விகளைக் கேட்க வேண்டும் • இயந்திரத்தனமான சிந்தனைக்கும்

About the Author

உலகில் இன்று தலைசிறந்த வியாபாரப் பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் பிரையன் டிரேசி. 75 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் அதிகமான பெருநிறுவனங்களுக்கும் 10,000க்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் தலைமைத்துவம், மேலாண்மை, விற்பனை, வியாபார மாதிரி மறுசீரமைப்பு, லாப மேம்பாடு ஆகிய விஷயங்களில் பல கருத்தரங்குகளை அவர் வடிவமைத்து வழங்கியுள்ளார். உலகம் நெடுகிலும் 5,000க்கும் அதிகமான சொற்பொழிவுகளை அவர் ஆற்றியுள்ளார். இதை 50,00,000க்கும் அதிகமானோர் கேட்டுள்ளனர். அவர் தற்போது ஒவ்வோர் ஆண்டும் 2,50,000 மக்களிடையே உரையாற்றி வருகிறார். அவர் உருவாக்கியுள்ள சுவாரசியமான, காணொளி சார்ந்த பயிற்சி வகுப்புகள் 38 நாடுகளில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. பிரையன் டிரேசி ஒரு வெற்றிகரமான நூலாசிரியர். அவர் 80க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். அவை 42க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன. அவருடைய விண்ணளவு சாதனை, சிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள், சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள், இலக்குகள், காலை எழுந்தவுடன் தவளை ஆகிய சில நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.
  • Publisher ‏ : ‎ Manjul Publishing House; First Edition (25 May 2024); Manjul Publishing House Pvt Ltd., C-16, Sector-3, Noida - 201301 (UP)
  • Language ‏ : ‎ Tamil
  • Paperback ‏ : ‎ 148 pages
  • ISBN-13 ‏ : ‎ 9789355439369
  • Item Weight ‏ : ‎ 125 g
  • Dimensions ‏ : ‎ 20.3 x 25.4 x 4.7 cm
  • Country of Origin ‏ : ‎ India

Customer Reviews

Be the first to write a review
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)

You may also like

Recently viewed by You