THE BOOK OF MISTAKES 9 SECRETS TO CREATING A SUCCESSFUL FUTURE

SKU: BK 0131245

Price:
Rs. 350
Add to Wishlist

Description

ஒரு சிலருக்கு மட்டும் ஏன் எப்போதும் அதிர்ஷ்டம் வாய்க்கிறது என்றும், அவர்கள் ஏன் மீண்டும் மீண்டும் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள் என்றும் நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? மாபெரும் வெற்றியாளர்கள் எந்த இரகசியத்தை அறிந்து வைத்துள்ளனர்? உங்களுக்கும் உங்களுடைய பிரம்மாண்டமான கனவுகளுக்கும் குறுக்கே எது நின்று கொண்டிருக்கிறது? இந்நூல், ஒரு புராதன நூலைப் பின்தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற உத்வேகமூட்டும் ஒரு பயணத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். அதிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் உங்களுடைய வாழ்க்கையைப் பரிபூரணமாக மாற்றிவிடக்கூடியவை. இந்நூலில் டேவிட் என்ற இளைஞனை நீங்கள் சந்திப்பீர்கள். அவன் நாளுக்கு நாள் நம்பிக்கையிழந்து கொண்டிருக்கிறான், அவனுடைய மன அழுத்தமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. அவனுக்கு ஒரு நல்ல வேலையும், ஓர் அழகான வீடும், அருமையான நண்பர்களும் வாய்த்திருந்தும்கூட, அவன் தனக்குள் வெறுமையை உணர்கிறான் . . . ஒரு மர்மமான பெண்ணை அவன் சந்திக்கும்வரை இது தொடர்கிறது! பிறகு அவனுடைய வாழ்க்கையில் அனைத்தும் மாறுகின்றன. ஒரு கதையின் வடிவில் அமைந்துள்ள இந்தச் சுயமுன்னேற்ற நூலிலிருந்து, பெரும்பாலான மக்கள் தங்களுடைய இலக்குகளை அடைவதைத் தடுத்துக் கொண்டிருக்கின்ற ஒன்பது தவறுகள் என்னென்ன என்பதை அறிந்து கொள்வதோடு, அத்தடைகளிலிருந்து எப்படி வெற்றிகரமாக மீள்வது என்பதையும் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். நீங்கள் உங்களுடைய பிறவி நோக்கத்தைக் கண்டுபிடித்து அதைப் பின்தொடரவும், உங்களுடைய ஆற்றலைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கின்ற எண்ணங்களைத் தாண்டிச் செல்லவும், நீங்கள் கனவு கண்டுள்ளவற்றைவிட அதிகமானவற்றைச் சாதிக்கவும் இந்த உருவகக் கதை உங்களுக்கு வழிகாட்டும்.

About the Author

ஸ்கிப் பிரிச்சர்டு ஒரு வெற்றிகரமான நிறுவனத் தலைவரும் பேச்சாளரும் ஆவார். தோல்விப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்ற நிறுவனங்களை மீட்டெடுத்து, அவற்றை மீண்டும் இலாபகரமாக இயங்க வைப்பதில் கைதேர்ந்த அவர், ‘இங்க்’ பத்திரிகையால் அமெரிக்காவின் தலைசிறந்த 100 பேச்சாளர்களில் ஒருவர் என்று புகழப்பட்டவர். தலைமைத்துவம், தனிநபர் மேம்பாடு உட்படப் பல தலைப்புகளில் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர் அவர். ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ அவரை ‘அயராத கொடையாளியாகவும்,’ ‘சிறந்த முன்மாதிரியாகவும்’ திகழ்கின்ற தலைமை நிர்வாகி என்று அழைத்து அவரைக் கௌரவித்துள்ளது. அவர் நடத்தி வருகின்ற ‘லீடர்ஷிப் இன்சைட்ஸ்’ என்ற வலைப்பக்கம் எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ளது. அமெரிக்க அரசுச் செயலாளர் கான்டோலீசா ரைஸ், பத்திரிகையாளர் டேன் ராத்தர், பிரபல பேஸ்பால் வீரர் ஜான் ஸ்மோல்ட்ஸ் உட்படப் பல பிரபலங்களை அவர் தன் வலைப்பக்கத்திற்காக நேர்காணல் செய்துள்ளார். அவருடைய கருத்துகள், பிபிசி, நியூயார்க் டைம்ஸ், சிஎன்என், ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ, பப்ளிஷர்ஸ் வீக்லி உட்பட எண்ணற்ற அச்சு ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன. அவர் தன் மனைவி அனிட்டாவுடனும் தன் மகள் ஜாயுடனும் அமெரிக்காவில் வசித்து வருகிறார். www.skipprichard.com என்ற வலைத்தளத்தின் வாயிலாக நீங்கள் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.

  • Publisher ‏ : ‎ Manjul Publishing House; First Edition (25 May 2024); Manjul Publishing House Pvt Ltd., C-16, Sector-3, Noida - 201301 (UP)
  • Language ‏ : ‎ Tamil
  • Paperback ‏ : ‎ 256 pages
  • ISBN-13 ‏ : ‎ 9789355438508
  • Reading age ‏ : ‎ 18 years and up
  • Item Weight ‏ : ‎ 230 g
  • Dimensions ‏ : ‎ 20.3 x 25.4 x 4.7 cm
  • Country of Origin ‏ : ‎ India

Customer Reviews

Be the first to write a review
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)

You may also like

Recently viewed by You